2 நாள் முழு ஊரடங்கு: திருநள்ளாறு கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து


காரைக்கால், ஏப். 23- காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில், நாடெங்கும் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருவதால், புதுச்சேரி மாநிலத்தில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி அந்த நாட்களில் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம். அதேசமயம், கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாக அதிகாரி காசிநாதன் தெரிவித்துள்ளார்.