2 நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை: நவ.23- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் இன்று மாலை பதவி ஏற்கின்றனர்.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த விவேக் குமார் சிங், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சுதீர் குமார் ஆகிய இருவரையும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, இருவரையும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் இன்று (நவ.23) மாலை பதவி ஏற்கின்றனர். இருவருக்கும் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. காலி இடங்கள் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது.