2 பேரைக் கொன்று தலைமறைவாக இருந்த ரவுடி மல்லி கைது

பெங்களூர் : நவம்பர் . 21 – இயற்கையாக இறந்ததாக அனைவரையும் நம்பவைத்து இரண்டு வருடங்களாக தலை மறைவாயிருந்த பிரபல கொலை குற்றவாளி ரௌடியை சி சி பி போலீசார் கைது செய்துள்ளனர் . நகரின் வொயிட் பீல்டு போலீஸ் நிலைய ரௌடி பட்டியலில் இருந்த மல்லிகார்ஜுனா என்ற மல்லி இரண்டு கொலை வழக்குகளில் தொடர்பு இருந்த நிலையில் போலிஸாரிடமிருந்து தப்பித்துக்கொள்ள தான் இறந்து போனதாக நம்பவைத்துள்ளான். தவிர இவன் இறந்து போனதாக இவனுடைய குடும்பத்தாரும் போலி ஆவணம் தயாரித்துள்ளனர் . காடுபீசனஹள்ளி பகுதியில் வசித்து வந்த ஓட்டுநர் சோமா என்பவனின் கொலையில் ஈடுபட்டு பின்னர் பின்னர் ராஜனுகுண்டேவில் இன்னொரு கொலையிலும் மல்லி ஈடுபட்டுள்ளான் . பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக போலீசாரின் கைக்கு சிக்காமல் தப்பி இருந்துள்ளான். வீட்டில் வந்து போலீசார் விசாரித்த போதெல்லாம் குடும்பத்தார் அவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தவிர சி சி பி போலீசார் அவனுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்த போதும் மல்லி இறந்து விட்டதாகவே தெரிவித்துள்ளனர். இவன் இறந்து விட்டதற்கான போலி சான்றிதழை குடும்பத்தார் தயாரித்திருப்பதுடன் இது குறித்து சந்தேகம் அடைந்த சி சி பி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஊரூராக சுற்றி திருந்து கொண்டிருந்த மல்லிகார்ஜுனா என்ற மல்லியை கைது செய்துள்ளனர்.