2 மகன்களுடன், தாய் தீக்குளித்து தற்கொலை

பெங்களூரு, மார்ச் 20: கடன் சுமை மற்றும் தனியார் வங்கி ஊழியர்களின் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜே.பி.நகர் 3வது ஸ்டேஜில் நடந்துள்ளது.
உடுப்பி மாவட்டம் அம்பலபாடியைச் சேர்ந்த தாய் சுகன்யா (48), அவரது இரட்டை மகன்கள் நிகித் மற்றும் நிஷித் (28) ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஜே.பி.நகர் 3 வது ஸ்டேஜில் வசித்து வந்த சுகன்யா குடும்பத்தினர், தனியார் வங்கி கடன் சுமைக்கு பலியாகி உள்ளனர். நேற்று மாலை தனியார் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து கடன் பணத்தை திருப்பி கேட்டனர். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வங்கி ஊழியர்கள் வந்ததால், அவர்களுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் உடனடியாக ஜே.பி.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.