2 மகள்களை கொன்று தம்பதி தற்கொலை

பெங்களூரு, ஆகஸ்ட் 3-
2 பெண் பிள்ளைகளை கொலை செய்துவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது
காடுகோடி போலீஸ் நிலைய சரகத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காடுகோடியைச் சேர்ந்த வீரார்ஜுன் விஜய் (31), அவரது மனைவி ஹேமாவதி (29), ஆகியோர் தங்களின் 8 மாத குழந்தை சுனயனா, 2 வயது மோக்ஷா மேக நயனா ஆகியோரை கொன்றுள்ளனர்.. பின்னர் இவர்கள் இருவரும் தங்கள் உயிரை தூக்கு போட்டு மாய்த்துக் கொண்டுள்ளனர்.
மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த விஜய், ஹேமாவதி என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சீகேஹள்ளி சாய் கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதி இரவு இவர்கள் வீட்டில் இந்த துயர சம்பவம் அரங்கேறி உள்ளது.
வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த இடத்துக்குச் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது இந்த சம்பவத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.