2 லாரிகள், பஸ் மோதி விபத்து- 6 பேர் பலி

நெல்லூர், பிப்.10-
நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே 2 லாரிகள், சுற்றுலா பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஸ்ரீ காளஹஸ்தியை நோக்கி, எருதுகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரியும், இரும்புகளை ஏற்றிக் கொண்டு மற்றொரு லாரியும் சென்று கொண்டிருந்தன.
இந்த நிலையில், இரும்பு ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் வந்த தனிய சுற்றுலாப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலாப் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். மற்றும் 20- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்து சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.