மும்பை : அக்டோபர் . 28 – நாட்டின் மிகவும் செல்வந்த தொழிலதிபர்களின் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு ஒருவன் உயிர் மிரட்டல் விடுத்திருப்பதுடன் 20 கோடி ரூபாய் கேட்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளான் . அப்படி தான் கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் தன்னிடம் மிக திறமையான துப்பாக்கி சூட்டாளர்கள் இருப்பதுடன் இவர்களை கொண்டு கொன்று விடுவதாக இ மெயிலில் தகவல் அனுப்பியுள்ளான். இப்படி மிரட்டல் விதித்தவனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இவனை தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த அக்டோபர் 27 அன்று முகேஷ் அம்பானியின் இ மெயில் அடையாளத்திற்கு வந்த தகவலில் இப்படி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பணத்தை கொடுக்க தவறினால் கொலை செய்து விடுவதாகவும் ஆங்கிலத்தில் தகவல் வந்துள்ளது. இது குறித்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பொறுப்பாளர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். மும்பை போலீசார் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 382, மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீசார் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்க்கு முன்னரும் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீதா அம்பானி ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதற்கு முன்னர் இவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவனை பீகாரில் போலீசார் கைது செய்துள்ளனர்.குற்றவாளி 30 வயதேயான ராகேஷ் மிஸ்ரா என அடையாளம் காணப்பட்டது. கடந்த அக்டோபர் 5 அன்று குற்றவாளி ரிலையன்ஸ் அறக்கட்டளை அலுவலகத்திற்கு போன் செய்து அம்பானி குடும்பத்தை கொலை செய்வதாக மிரட்டியிருந்தான். தவிர மொத்த மருத்துவமணியையும் வெடி குண்டு வைத்து தகர்ப்பதாகவும் மிரட்டியிருந்தான். பின்னர் இந்த இளைஞன் வேலையற்றவன் என்பது விசாரணையில் தெரியவந்தது.