பெங்களூர், செப் 5-
பெங்களூரில் இருந்து 50 பேர் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாபஸ்பேட் சிவகங்கே என்ற இடத்திற்கு 30 மோட்டார் பைக்குகள்5 கார்களில் சென்றனர்.
இவர்கள் சுற்றுச்சூழல் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்களின் நோக்கம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பிளாஸ்டிக் வேலை ஒழிக்க ஈடுபட்டனர். இதில் பல்வேறு வயதுகளை சார்ந்தவர்கள் இடம்பெற்றார்கள்.ஹர்ஷிந்த் என்பவர் கூறுகையில் ,விடுமுறை நாட்களில் நாங்கள் மகிழ்ச்சி உடன்
பயணிக்கிறோம். இயற்கை அழகை மீண்டும் கொண்டுவர முனைந்திருக்கிறோம். அது எங்களது பொறுப்பாக கருதுகிறோம்.
வருங்கால சந்ததிக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என நம்புகிறோம்.
எனவே சுத்தம் ச குறித்து ஆர்வம் கொண்டு சிவகங்கே குன்று பகுதிக்கு பயணத்தை மேற்கொண்டோம்.
பல்வேறு இடங்களில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளை கழிவுகளை சேகரித்து சுத்தப்படுத்தினோம்.
குன்று பகுதியில் 200 கிலோ எடை அளவில் மெல்லிய பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து அகற்றினோம் என்றார்.56 வயது முன்னாள் போலீஸ் அதிகாரி சஞ்சய் குமார் தற்போது செக்யூரிட்டி கம்பெனியை நடத்தி வருகிறார். இவர் இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். இவர்களின் ஆர்வத்தை ஊக்கம் அளித்து அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபட்டார்.
இந்த சுற்றுப்புற தூய்மைப்படுத்தும் பணியில் ரயனாஸ் கத்ரி ஏழு வயது சிறுவனும் இதில் ஈடுபட்டிருந்தார். இவரின் தந்தை அனில் கத்ரி கூறுகையில்,இது முதல் கட்டம். சுத்தப்படுத்த பணியில் ஈடுபட என்னுடைய தந்தையும் கூட தூய்மையை விரும்புகிறவர். அவரும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஈடுபட்டுள்ளார் என்றார்