200 தலைவர்களிடம் விசாரணை

புது டெல்லி : செப்டம்பர். 20 – கடந்த 18 வருட கால கட்டத்தில் யு பி ஏ மற்றும் என் டி ஏ அரசுகளின் ஆட்சிக்காலத்தில் 200 முக்கிய அரசியல்வாதிகள் மத்திய விசாரணை குழு ( சி பி ஐ ) வலையில் சிக்கி கைதுக்குள்ளாகி தற்போது விசாரணையை எதிர்கொண்டுள்ளனர். யு பி ஏ ஆட்சியில் 60 சதவிகிதம் மற்றும் பி ஜே பி தலைமையிலான என் டி ஏ ஆட்சியில் 95 சதவிகித தலைவர்கள் சி பி ஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 80 சதவிகிதத்தினர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த அரசியல் தலைவர்களை சி பி ஐ விசாரணைக்கு ஒப்படைத்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை மத்தியில் என் டி ஏ அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பெருமளவில் அதிகரித்துள்ளது. சி பி ஐ விசாரணை நீதிமன்ற தகவல்கள் , அதிகாரபூர்வ ஆவணங்களை சேகரித்து மற்றும் விசாரணை குழுக்கள் அளித்த தகவல்களை வைத்து இந்த புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான யு பி ஏ ஆட்சியில் குறைந்தது 72 அரசியல் தலைவர்கள் சி பி ஐ தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . இவர்களில் 43 பேர் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள். அதே போல் என் டி ஏ அரசின் ஆட்சிக்காலத்தில் 124 முக்கிய அரசியல் தலைவர்களை சி பி ஐ விசாரணைக்கு உட்படுத்தியிருப்பதுடன் இவர்களில் 118 பேர் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள். என் டி ஏ ஆட்சியில் இந்த வழக்குகளின் எண்ணிக்கை 95சதவிகிதமாகும். யு பி ஏ காலகட்டத்தில் 72, என் டி ஏ ஆட்சிக்காலத்தில் 124 அரசியல் தலைவர்களின் பட்டியலை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருப்பதுடன் , இவர்கள் அனைவரும் ஏதாகிலும் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கு எதிராக தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யு பி ஏ ஆட்சி காலத்தில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் , காமன்வெல்த் விளையாட்டுகள் , மற்றும் நிலக்கரி ஊழல்களில் 72 முக்கிய தலைவர்களை சி பி ஐ விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. இதுவே யு பி ஏ காலகட்டத்தில் குஜராத்தில் அம்மாநில உள்துறை அமைச்சராயிருந்த அமித் ஷா , சோராபுத்தின் ஷேக் என்கவுண்டர் விஷயமாக கைது செய்யப்பட்டார். முன்னாள் கர்நாடகா முதல்வர் பி எஸ் எடியூரப்பா பெல்லாரியின் குவாரி அதிபர் ஜனார்தன் ரெட்டி , மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராயிருந்த ஜார்ஜ் பெர்னாண்டிஸ் , பி ஜே பி தலைவர் பிரமோத் மஹஜன் மறைவுக்கு பின்னரும் அவருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டது. 2014 முதல் என் டி ஏ ஆட்சிக்காலத்தில் டி எம் சி யு 30 பேர் மற்றும் காங்கிரசின் 26 பேரை சி பி ஐ விசாரணை நடத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி , ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் , மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் , பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்க் ஆகியோர் சி பி ஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முக்கிய அரசியல் தலைவர்களாக உள்ளனர்.