2013 முதல் வாக்காளர் பட்டியல் மோசடி பிஜேபி புகார்

பெங்களூர் : நவம்பர். 20 – வாக்காளர்கள் சேகரிப்பில் நடந்துள்ள அக்கிரமங்கள் குறித்து பி ஜே பி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே நடந்துவரும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் 2013 முதல் நடந்துள்ள வாக்காளர் பட்டியல்கள் சீரமைப்பு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில பா ஜ தா பொதுச்செயலாளர் என் ரவிக்குமார் தலைமையிலான குழுவினர் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். தவிர 2017ல் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த போது செலுமே என்ற தனியார் நிறுவனத்திற்கு வாக்காளர்கள் விவரங்கள் சேகரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இன்று காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் பி ஜே பிக்கு எதிராக இந்த நிறுவனத்தை நியமித்ததை மறந்து பி ஜே பிக்கு எதிராக குற்றங்கள் சாட்டிவருகின்றனர். தவிர தற்போது பி ஜே பி இந்த விவகாரத்தின் முழு ஆய்வுகளை 2013 முதல் ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது . செலுமே என்ற தனியார் நிறுவனத்திற்கு வாக்காளர்களுக்கு தாங்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அன்றைய 2017-18 ஆண்டில் முதல்வராயிருந்த சித்தராமையா ஆட்சிக்காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. என பி ஜே பி புகாரில் தெரிவித்து;ளது. 24 லட்ச வாக்காளர்களின் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்ற காங்கிரசின் புகார் உண்மைக்கு புறம்பானது. இந்த நடவடிக்கையில் புறக்கணித்திருப்பது வெறும் 6 லட்சத்து 73 ஆயிரத்து 422 வாக்காளர்கள் மட்டுமே. இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். எவ்வித தனியார் நிறுவனம் அல்லது எந்த அதிகாரி தவறு செய்திதருந்தாலும் அவர்ளுக்கு எதிராக நடவடிகை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும் என பி ஜே பி தெரிவித்துள்ளது