2023 தேர்தலில் ஜனதாதளத்திற்கு140 இடங்கள் : குமாரசாமி நம்பிக்கை

ஹாசன் : செப்டம்பர். 13 – அடுத்த ஆண்டு மாநிலத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல்க்ளில் ம ஜ தா கட்சி 130 முதல் 140 இடங்களில் வெற்றி பெரும் நம்பிக்கை உள்ளதாக ம ஜ தா தலைவர் ஹெச் டி குமாரசாமி நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளார். ஹாசனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி 2006ம் ஆண்டின் தேர்தலில் என்னுடைய தந்தைக்கு எதிராக நான் சென்றதால் என் தந்தையாரின் உடல் நிலை பாதிப்புக்குள்ளாகியது . இப்போது எங்களின் ஜென்மபூமியிலிருந்து சவால் விடுத்து புறப்பட்டுள்ளேன். ப்ரஜ்வல் ரேவண்ணா , சூரஜ் என அனைவரின் எதிர்காலமும் எனக்கு முக்கியம். மக்கள் ஆதரவு ஆட்சி அமைய உதவுங்கள் என குமாரசாமி மக்களிடம் கேட்டுகொண்டுள்ளார். அதிகாரம் இருக்கட்டும் அல்லது இல்லாது போகட்டும் நாங்கள் ஏழை விவசாயியின் குழந்தைகள் . ஹாசன் அரசியலில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். உங்கள் வீட் டு குழந்தைகள் தவறு செய்தால் நீங்கள் மன்னிப்பதில்லையா , நானதி இந்த நிலத்தில் ஜென்மம் எடுத்தவன். ராம்நகர் மாவட்ட மக்கள் எனக்கு அரசியல் ஜென்மம் கொடுத்துள்ளனர் . என்னுடைய உழைப்பு இந்த மாவட்ட மக்களுக்கு நான் அளிக்கும் கௌரவம். எங்களிடமிருந்து தவறு நேர்ந்திருந்தால் மன்னியுங்கள். மன்னிக்கும் அதிகாரம் உங்களுக்கு உள்ளது. ஹெச் டி ரேவண்ணாவின் அறிக்கையை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். ரேவண்ணா சற்றே கோபமாக பேசுவார் அவ்வளவே. ஆனால் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து சதா யோசித்துக்கொண்டிருக்கும் நபர் என குமாரசாமி கூறினார் . தவிர , நெலமங்களாவிலிருந்து ஹாசனுக்கு நான்கு தட சாலை அமைப்பு , பெங்களூர் – அரசிகெரே ரயில்வே திட்டம் , ஆகியவை குறித்து பேசிவரும் பாரதீய ஜனதா எம் எல் ஏ ப்ரீத்தம் கௌடாவிற்கு எதிராகவும் குமாரசாமி குற்றபத்திரிக்கை வாசித்தார்.