21ம் தேதி முதல் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பெங்களூரு, மார்ச் 14-
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மார்ச் 21 முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. உகாதி பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. மார்ச் 21ஆம் தேதி காலை 6 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைவர் ஆனந்த் சுப்பாராவ் தெரிவித்தார். வரும் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த போராட்டத்தில்1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். சுமார் 23 ஆயிரம் பேருந்துகள் ஓடாது. எக்காரணம் கொண்டும் டெப்போவில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் தொலைக்காட்சிக்கு அவர் தெரிவித்தார்.
கோரிக்கைகள் என்ன?

  • அடிப்படை சம்பளத்தை 25 சதவிகிதம் உயர்த்த வேண்டும்.
  • பணிக்கொடை/அலவன்ஸ் 5 மடங்கு அதிகரிப்பு தேவை
    *ஏப்ரல் 2011ல் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் நியமிக்க வேண்டும்
  • ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
  • வேலைநிறுத்தத்தின் போது இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களை அவர்களது அசல் இடத்திற்கு மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்ட உள்ளது