பெங்களூர், அக் 7-
கர்நாடக மாநிலத்தில் வரும் 21 ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஆரம்பத்தில் அக்டோபர் 10 ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று முதல் தகவல் அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், தற்போது அக்டோபர் 21 வரை கன மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
வானிலை
ஆய்வு மையம் கருத்து படி அக் 8 முதல் 21 வரை கன மழை பெய்யும். மைசூர், மண்டியா, குடகு, சிக்கமகளூரு, ராம் நகர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யும்.
அத்துடன் கோலார், வட கன்னடா, உடுப்பி சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பெங்களூரில் இரவு நேரங்களில் கன மழை பெய்யும். எனவே பருவ மழை இம்முறை அதிகளவு பெய்யும். ஆனாலும், சில மாவட்டங்களில் வறட்சி ஏற்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.