21 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்

Police inspecter Uday Ravi parents residence in mudgal .

பெங்களூர் : ஜூன். 17 – அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 21 ஊழல் அதிகாரிகளை ஊழல் தடுப்பு பிரிவு (ஏ சி பி ) அதிகாரிகள் வலைக்குள் சிக்கி பணம் , தங்கம் உட்பட கோடிக்கணக்கான மதிப்புள்ள அக்கிரம சொத்துக்களை கண்டெடுத்துள்ளனர். பெங்களூர் , தார்வாட் , ஹாவேரி , சிவமொக்கா உட்பட மாநிலத்தின் 80 இடங்களில் ஒரே நேரத்தில் 300 பேர் அடங்கிய ஏ சி பி அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தி 21 ஊழல் அதிகாரிகளுக்கு காய்ச்சல் பிடிக்க வைத்துள்ளனர் . நீர்ப்பாசனம் , பொதுப்பணித்துறை , போக்குவரத்து உட்பட பல்வேறு இலாக்காக்களின் பொறியாளர்கள் , உட்பட 21 அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் நடந்து வரும் சோதனைகள் மாலை வரை தொடர உள்ளது . நகரின் ஜெ பி நகர் , பசவன்குடி , சந்திரா லே அவுட் , தொட்டகள்ளசந்திரா ஆகிய இடங்களில் சோதனைகள் நடந்து வருவதுடன் வருமானத்தைவிட அதிக அளவில் பணம் மற்றும் சொத்துக்களை சம்பாதித்திருப்பதாக வந்த புகார்களின் பின்னணியில் சோதனைகள் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ள ரொக்கங்கள் , தங்கம் , ஆடம்பர பொருட்கள் , உட்பட கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்தும் பரிசீலனை நடத்தப்பட்டு வருவதாக ஏ சி பியின் கூடுதல் போலீஸ் உயரியக்குனர் (ஏ டி ஜி பி ) சீமன்த் குமார் சிங்க் தெரிவித்துள்ளார்.

பெலகாவியின் சூப்பரின்டென்டென்ட் இன்ஜினீயர் பீமராவ் வொய் பவார் , சிறு நீர்ப்பாசன துறை உடுப்பி பிரிவின் உதவி பொறியாளர் ஹரீஷ் , ஹாசனின் செயல் இயக்குன பொறியாளர் ராமகிருஷ்ணா ஹெச் வி , கார்வாரின் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜீவ் புரசய்யா நாயக் , பொன்னம்பேட்டை தாலூகா பஞ்சாயத்து பிரிவின் மூத்த பொறியாளர் பி ஆர் போப்பைய்யா , பெலகாவி மாவட்ட பதிவு அதிகாரி மதுசூதன் , சிறு நீர்ப்பாசன துறை ஹூவினஹடகளி துணை பிரிவின் உதவி பொறியாளர் பரமேஷ்வரப்பா , ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடந்து வருகிறது . பாகல்கோட்டெயின் வட்டார போக்குவரத்து அதிகாரி யல்லபா என் படசாலி , இதே பாகல்கோட்டேயின் நிரமித்தி மையத்தின் திட்ட இயக்குனர் சங்கரப்பா நாகப்பா கோகி , கதக் மாவட்டத்தின் பஞ்சாயத்து செயலாளர் பிரதீப் எஸ் அலூரு , பெங்களூரின் துணை தலைமை மின்சார இயக்குனர் திப்பண்ணா பி சிரசகி , பீதாரின் கர்நாடகா கால்நடை மற்றும் மீன்வளத்துறை பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் ம்ருதுஞ்சா சன்னபசய்யா திரணி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர் வளத்துறை சிக்கபள்ளாபுரா பிரிவு செயல் இயக்குனர் பொறியாளர் மோகன் குமார் , உத்தர கன்னடா மாவட்ட பதிவு அதிகாரி ஸ்ரீதர் , பெங்களூரின் பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற சூப்பரின்டென்டென்ட் இஞ்ஜினீயர் மஞ்சுநாத் . ஜி , பி டி ஏ சி பிரிவு ஊழியர் சிவலிங்கையா , கொப்பால் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதய ரவி , கடூர் நகராட்சியின் நிர்வாகிப்பு அதிகாரி பி ஜி திம்மையா , ராணிபெண்ணூரின் திட்ட அலுவலகத்தை சேர்ந்த சந்திரப்பா சி ஹொலேகர் , மற்றும் பெங்களூர் பல்கலைக்கழகத்தின் மதிப்பீடு துறையின் ஓய்வு பெற்ற பதிவாளர் ஜனார்தன் ஆகியோர் வீடுகள் அலுவலகங்களிலும் ஊழல் ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிக்கிய லஞ்சப் பெருச்சாளிகள்

 1. பீமாராவ் வொய். பவார் , சூப்பரின்டென்டென்ட் இன்ஜினீயர் , பெலகாவி
 2. ஹரீஷ் , உதவி பொறியாளர் , சிறு நீர்ப்பாசனம் , உடுப்பி
 3. ராமகிருஷ்ணா ஹெச். வி , ஏ இ இ , சிறு நீர்ப்பாசனம் , ஹாசன்
 4. ராஜீவ் புரசய்யா நாயக் , உதவி பொறியாளர் ,பொதுப்பணித்துறை , கார்வார்
 5. பி ஆர் போப்பைய்யா , ஜுனியர் இன்ஜினீயர் , பொன்னம்பேட்டை பஞ்சாயத்து
 6. மதுசூதன் , தாலூக்கா பதிவாளர் , ஐ ஜி ஆர் அலுவலகம் ,பெலகாவி
 7. பரமேஸ்வரப்பா , உதவி பொறியாளர் , சிறு நீர்ப்பாசனம் , ஹூவினஹடகலி
 8. எல்லப்பா என் படசாலி , ஆர் டி ஓ , பாகல்கோட்டே
 9. ஷங்கரப்பா நாகப்பா கோகி , திட்ட இயக்குனர் , நிர்மித்தி மையம் ,பாகல்கோட்டே
 10. பிரதீப் எஸ் அலூர் , செயலாளர் , ஆர் டி பி எல் , கதக்
 11. சித்தப்பா டி , துணை மின்சார அதிகாரி , பெங்களூர்
 12. திப்பண்ணா சி சிரசகி , தாலூக்கா அதிகாரி , பீதர்
 13. ம்ருதாஞ்சயா சென்னபசய்யா திராணி , கர்நாடகா கால்நடை மற்றும் மீன்வள பல்கலைக்கழகம் பிதார்
 14. மோகன் குமார். செயல் நிர்வகிப்பு பொறியாளர் , நீர்பாசனத்துறை , சிக்கபள்ளாபுரா
 15. ஸ்ரீதர் , தாலூக்கா பதிவாளர் , கார்வார்
 16. மஞ்சுநாத் ஜி , இ இ (ஓய்வு) பொதுப்பணித்துறை
 17. சிவலிங்கையா , சி பிரிவு ஊழியன் , பி டி ஏ
 18. உதய ரவி , போலீஸ் இன்ஸ்பெக்டர் , கொப்பால்
 19. பி ஜி திம்மையா , ஊழியர் , கடூர் நகரசபை
 20. சந்திரப்பா சி ஹொலேகர் , யு டி சி அலுவலகம் ,ராணிபெண்ணூர்
 21. ஜனார்தன் , பெங்களூரு பல்கலைக்கழக மதிப்பீட்டு துறை ஓய்வு பெற்ற பதிவாளர்.