
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் 23ம் தேதி முதல் 25ம் தேதிகளுக்கு இடையே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் தெலங்கானா பகுதிகளில் படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டிற்கு நீரை வாரி வழங்கும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 19ம் தேதி வரை மாநிலத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென் தமிழ்நாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசானது லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் திங்கட்கிழமை பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும், சென்னையை பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமை வரை லேசானது அல்லது மிதமான மழை அல்லது சில இடங்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். தென்மேற்கு பருவமழை விடைபெறுவதற்கான வானிலை சூழல்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள வானிலை மையம், ஓரிரு நாட்களில் தெலங்கானா, மராட்டியம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை விடைபெறும் என்று கணித்துள்ளது.