230 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மனைவியை கொன்ற போலீஸ்காரர்

பெங்களூரு, நவ. 8- மனைவி கொலை செய்த வழக்கில், தற்கொலைக்கு முயன்ற போலீஸ் காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பிறகு அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.கோலார் மாவட்டத்தில் உள்ள வீரபுரத்தைச் சேர்ந்தவர் கிஷோர். போலீஸ் காவலரான இவர், பெட்டஹலசூர் கிராம பஞ்சாயத்து செயலாளர் சுப்ரமணியின் இளைய மகள் அறிவியல் பட்டதாரியான பிரதிபாவை கடந்த ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.ஹொஸ்கோட்டை அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் இறந்த பிரதீபாவுக்கு (24) 11 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அண்மையில் கிஷோர், பிரதிபாவை தொலைபேசியில் அழைத்துள்ளார். 150 அழைப்புகளுக்கு பதிலளிக்காததால் அவரை சந்தேகித்து, சாம்ராஜநகர் நகர் உள்ள ராமசமுத்திரத்தில் உள்ள சாமராஜநகர் கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து, 230 கிலோமீட்டர் தொலைவில் ஹொஸ்கோட்டை அருகே உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். திங்கள்கிழமை காலை, கிஷோர் தானும் பூச்சி மருந்தை உட்கொண்டு, மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் எனக் கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் இருந்த அவர் கோலாரில் உள்ள ஆர்.எல்.ஜலப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக‌ ஹொஸ்கோட்டை போலீசார் அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு மனைவியை கொலை செய்த வழக்கில் கிஷோர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.