24 மணி நேரத்தில் 228- பேருக்கு கொரோனா

புதுடெல்லி, ஜன.6-
சீனாவில் பரவி வரும் பிஎப் 7 வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 288- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 4 உயிரிழப்புகள் பதிவாகியிருக்கின்றன. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.01 ஆகவும் கொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 98.80 சதவிகிதமாகவும் உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,503- ஆக உள்ளது.