24 மணி நேரத்தில் 635- பேருக்கு கொரோனா

புதுடெல்லி, நவ.17-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 635 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 635- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 67 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 7,175 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 546- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 98.79 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 386- பேர் நேற்று குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 219.83 கோடி டோஸ்கள் ஆகும்.