24 மணி நேரத்தில் 656 பேருக்கு கொரோனா

புதுடெல்லி,நவ.18- இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,67, 967 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,034- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,30,380- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30, 553ஆக உயர்ந்தது. இந்தியாவில் நேற்று மட்டும் 1,03,328 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது