24 ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பெங்களூரு, மார்ச் 18- கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தை 15 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்தாலும், அரசுக்கும், போக்குவரத்து ஊழியர் சங்கத்துக்கும் இடையேயான இழுபறி முடிவுக்கு வரவில்லை. 25 சதவிகிதம் உயர்த்தி வழங்க வலியுறுத்தி வரும் 24-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.மாநில அரசு சம்பளத்தை 15 சதவிகிதம் உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது ஊழியர்களை பொருளாதார ரீதியாக மேலும் ஒடுக்கும் வேலை என்றும், இது போதாது மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்ச் 24-ம் தேதி மாநிலத்தில் போக்குவரத்து சேவை முடக்கப்படும் என அரசு சாலைப் போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வு ஏற்பட்டால், கிடைக்கும் கூலியில் வாழ முடியாது. எனவே எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தனர்.
அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கிய 4 மணி நேரத்தில் இடைக்கால ஊதியத்தை 17 சதவிகிதம் உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டது. கர்நாடக மாநில மின்சார ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பிற்கு பிறகு 20 சதவிகிதம் ஊதிய உயர்வு அளித்துள்ளது. ஆனால் நாங்கள் கேட்டது 25 சதவீதம். ஆனால் அரசு 15 சதவிகிதம் உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிருப்தி தெரிவித்தார்.
போராட்டத்தின் போது போக்குவரத்து ஊழியர்களுக்கு எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் கொடுத்துள்ளீர்கள். இது பொய்யா, விலைவாசி உயர்வால் வாழமுடியவில்லை என்றும் எனவே வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.