250 கேமராக்களை ஆய்வு செய்த பிறகு திருடன் சிறை பிடிப்பு

பெங்களூர், பிப். 24- சேஷாதிரிபுரம் போலீஸ் சரகத்தில் வீடு ஒன்றில் நடந்த திருட்டு விவகார குற்றவாளி பிரதீப் மண்டலா என்பவனை அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த குற்றவாளி பிரதீப் மாதத்திற்கு ஒருமுறை ரயிலில் நகருக்கு வந்துகொண்டிருந்தான் . செல்வந்தர்களின் வீடுகளை அடையாளம் கண்டு இரவு நேரங்களில் அந்த வீடுகளில் திருடி வந்துள்ளான். இவனிடமிருந்து தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேரு ரவுண்டானா அருகில் ஒரு வீட்டில் ஜனவரி 17 அன்று திருடு நடந்ததில் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொண்டு நடவடிக்கை மேற்கொண்ட போலீசாருக்கு திருடன் குறித்த துப்பு கிடைக்கவில்லை. திருடு நடந்த வீடு மற்றும் சுற்றுப்பகுதியில் 250க்கும் மேற்பட்ட சி சி டி வி காமிராக்களை ஆய்வு செய்ததில் குடியிருப்பில் குற்றவாளி தவறான பெயர் மற்றும் முகவரி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது . சில காமிராக்களில் திருடனின் முகம் பதிவாகியிருந்தது. அதை வைத்து விசாணையை தொடர்ந்த போலீசாரிடம் குற்றவாளி பிரதீப் மண்டலா சிக்கியுள்ளான். தற்போது இவனிடம் தீவிர விசாணை நடந்து வருகிறது. தங்க நகைகளை திருக்கொண்டு குற்றவாளி தன் சொந்த ஊருக்கு சென்று வந்துள்ளான் குறைந்த விலைக்கு நகைகளை விற்று வந்த பணத்தில் ஆடம்பர வாழக்கை வாழ்ந்து வந்துள்ளான். நகரில் நடந்த பல திருட்டு புகார்களில் இவன் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.