2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் டாடா குழுமம்

லண்டன், ஜூன் 3- டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா ஸ்டீல், பிரிட்டனில் உள்ள தனது நிறுவனத்தில் “greener steelmaking process” எனப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தி ஸ்டீல் உற்பத்தி செய்ய இருப்பதன் காரணமாக, சுமார் 2,500 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டி.வி. நாரேந்திரன் கருத்து தெரிவிக்கையில், பிரிட்டனில் உள்ள ஆலைகளில் ஏற்பட்ட இந்த பணி நீக்கம் “தவிர்க்க முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவைத் தளமாகக் கொண்ட டாடா ஸ்டீல், சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் டால்போட்டில் (Port Talbot) ஒரு ஆண்டுக்கு 3 மில்லியன் டன் (MTPA) ஸ்டீல் உற்பத்தி செய்து வருகிறது. இது இங்கிலாந்தின் மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. மேலும், நிறுவனத்தின் வெவ்வேறு செயல்பாடுகளிலும் சுமார் 8000 நபர்கள் பணி புரிகின்றனர். பிரிட்டனில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பணி நீக்கத்திற்கான காரணங்கள்: டாடா ஸ்டீல் நிறுவனம் டிகார்பனைசேஷன் (Decarbonization) திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதாவது டிகார்பனைசேஷன் என்பது நிலக்கரி, இயற்கை எரிவாயு அல்லது எண்ணெய் போன்ற எரிபொருட்களின் பயன்பாட்டிலிருந்து கார்பன் இல்லாத மற்றும் இயற்கையில் கிடைக்ககூடிய எரிசக்தி ஆதாரங்களுக்கு விரைவாக மாறுவதாகும். டாடா ஸ்டீல் பாரம்பரிய பிளாஸ்ட் ஃபர்னஸ் ஸ்டீல் தயாரிப்பில் இருந்து மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த குறைந்த எமிஷன் எலக்ட்ரிக் ஆர்க் ஃபர்னேஸ் (EAF) செயல்முறைக்கு மாற இருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இதற்கு குறைவான பணியாளர்களே தேவைப்படுகின்றனர். இது குறித்து பேசிய நரேந்திரன் யுகே அரசாங்கத்தின் உதவியுடன் EAF செயல்முறைக்கு மாறுவது, குறைந்த உற்பத்தி செலவுகளின் அடிப்படையில் நிறுவனத்தை இன்னும் சிறப்பாக பிற நிறுவனங்களுடன் போட்டியிடச் செய்யும்.
மேலும் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் Co2 வெளியேற்றத்தைக் குறைக்க உதவும். இந்த செயல்முறைக்கு குறைவான பணியாளர்களே தேவைப்படுவதால் 2500 பணி நீக்கங்கள் ஏற்படுவதாகவும், இது தவிர்க்க முடியாதது என்றும் கூறியுள்ளார். Rahul Gandhi எந்த Stockலாம் வாங்கிருக்காரு தெரியுமா? முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில், டாடா ஸ்டீல் மற்றும் UK அரசு இணைந்து போர்ட் டால்போட் ஸ்டீல்வொர்க்ஸை நவீனமயமாக்கும் திட்டத்தில் இணைந்தது. இந்த திட்டமானது ஸ்டீல் தயாரிப்பதற்காக புத்தம் புதிய, அதிநவீன எலக்ட்ரிக் ஆர்க் ஃபர்னஸ் உருவாக்குவதை உள்ளடக்கியது. இதற்கான மொத்த செலவு £ 1.25 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. போர்ட் டால்போட் ஸ்டீல் தயாரிக்கும் நிலையத்தில் டிகார்பனைசேஷன் திட்டங்களை செயல்படுத்த இங்கிலாந்து அரசாங்கம் £ 500 மில்லியன் வரை செலவிட்டுள்ளது. இந்த மாற்றங்களுக்காக பர்னாஸ்கள் ஜூன் மாதத்தில் மூடப்பட்டுள்ளதாகவும், மேலும் சில செப்டம்பர் மாதங்களில் மூட இருப்பதாகவும் நரேந்திரன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஸ்டீல் தயாரிப்புகளில் நிறைய பிரச்சனைகள் இருப்பதாகவும், ஸ்டீல் குப்பைகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாக உள்ளதால், இந்த EAF செயல்முறைக்கு மாற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.