26 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

பெங்களூரு, பிப்.11-
பெங்களூரில் தங்கச் சங்கிலி பறிப்பு வழகில் வழக்கில் குற்றவாளி 26 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணிடம் கொள்ளையடித்து தப்பிச் சென்ற குற்றவாளியை 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயநகர் போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளி குலாப் கான்.
குற்றம் சாட்டப்பட்ட குலாப் கான் கடந்த 1998ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி ஜெயநகர் 5வது பிளாக்கில் வசந்த்தா என்ற பெண்ணிடம் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார்.அதோடு அவர் வேறு எந்த வழிப்பறி கொள்ளை திருட்டு வழக்கில் ஈடுபடவில்லை. இவர் வெல்டிங் வேலை செய்து ராமநகரில் குடியேறினார். இந்த நிலையில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு மீண்டும் தூசி தட்டி விசாரிக்கப்பட்டபோது மேற்கண்ட நபர் பிடிபட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.