26 சிறப்பு ரெயில்கள்

மும்பை, மார்ச்3-
ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய ரெயில்வே வடமாநிலங்களுக்கு 105 சிறப்பு ரெயில்கள் இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால் பயணிகள் அதிகரிப்பு காரணமாக கூடுதலாக 26 சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி லோக்மான்ய திலக் டெர்மினல், மும்பை சி.எஸ்.எம்.டி. ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வாரணாசி, மங்களூரூ ஜங்ஷன், கர்மாலி ஆகிய இடங்களுக்கு இந்த ரெயில்கள் இயக்கப்படுகிறது.இதன்படி மும்பை -வாரணாசிக்கு 2 சேவைகளும், மும்பை- கர்மாலிக்கு 4 சேவைகளும், மும்பை-மங்களூரு இடையே 2 சேவைகளும் இயங்கும். இதனால் ஹோலி பண்டிகையொட்டி மத்திய ரெயில்வே சார்பில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கை 131 ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.