பெங்களூரு : செப்டம்பர். 25 – கடந்த சில நாட்களாக வடகிழக்கு , வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையின் ஆர்பாட்டம் விரைவில் முடிவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் நாட்டின் பல மாநிலங்கள் மட்டுமில்லாது அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட நாட்டின் பீஹார் உத்தரபிரதேசம் வரையில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது . தவிர
இதே நேரத்தில் இன்று பீஹார் , ஜார்க்கண்ட் , மேற்கு வங்காளம் , சிக்கிம் , மற்றும் வட கிழக்கு மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இந்த மழை அடுத்த 27 வரை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.