27 இந்தியர்கள் பாதுகாப்பாக எகிப்து சென்றனர்:

ஷில்லாங்:அக்.9- இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கிய 27 இந்தியர்கள் பாதுகாப்பாக எகிப்து சென்றனர் என மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா தெரிவித்துள்ளார். மேகாலயாவை சேர்ந்த 27 பேரும் இந்திய வெளியுறவுத்துறை உதவியால் பாதுகாப்பாக எகிப்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுக்கள் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் ஒரு நாடாக தனி உருவானதிலிருந்தே பிரச்சினை நீடித்து வருகிறது. பாலஸ்தீன பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக ஆயுத மோதல் நீடித்து வருவதால் இரு தரப்பிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென அந்நாட்டு நேரப்படி நேற்று காலை 6.30 மணிக்கு இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலிலில் 600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வன்முறையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கிய 27 இந்தியர்கள் பாதுகாப்பாக எகிப்து சென்றனர் என மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தலத்தில் தெரிவித்துள்ளதாவது; “இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கிய 27 இந்தியர்கள் பாதுகாப்பாக எகிப்து சென்றனர்”என மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா தெரிவித்துள்ளார். மேகாலயாவை சேர்ந்த 27 பேரும் இந்திய வெளியுறவுத்துறை உதவியால் பாதுகாப்பாக எகிப்துக்கு அழைத்து வரப்பட்டனர்.