27-ந்தேதி முதல் முக்கிய வழக்கு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு

புதுடெல்லி ,செப் 22- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த 27-ந்தேதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற மறுநாளிலேயே 25 அரசியல் சாசன அமர்வுகளை அமைத்தது நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நீதிபதிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைகளை வரும் 27-ந் தேதி முதல் நேரடி ஒளிபரப்பு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. ஒரு மனதாக எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, முதலில் யூ டியூப் சேனலில் வழக்கு விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும், 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் நடைபெறுகிற சில குறிப்பிட்ட வழக்குகள் அல்லது அரசியல் சாசனம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணைகள் முன்னோடி திட்டமாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.