29வது மாடியிலிருந்து குதித்து சிறுமி தற்கொலை

பெங்களூர் : ஜனவரி. 24 – தனியார் பள்ளியில் 6வது வகுப்பில் படித்து வந்த சிறுமி ஒருவள் அபார்ட்மெண்டின் 29 வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் பேகூர் அருகில் நடந்துள்ளது. கீழே விழுந்த வேகத்தில் சிறுமி துண்டு துண்டாக சிதறியது கண்டு அவளின் பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. தனியார் பள்ளியில் ஆறாவது வகுப்பு படித்து வந்த இந்த சிறுமி அதிகாலை ஐந்து மணிக்கு மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளாள் . இவளுடைய தந்தை மென் பொருள் பொறியாளராக பணியாற்றிவருவதுடன் தாய் வீட்டிலேயே இருந்து சிறுமியை நன்றாக கவனித்து வந்துள்ளார். இவர்கள் அபார்ட்மெண்டில் 29 வது மாடியில் வசித்து வந்துள்ளனர். எனில் இவர்களின் பொருளாதார நிலைமை குறித்து யாரும் கணித்து கொள்ளலாம் . மகளை இவர்கள் நன்றாகவே வளர்த்து வந்தும் நேற்று இரவு வழக்கம்போல் சிறுமி உறங்கியுள்ளாள். காலை 4 மணிக்கு அவள் எழுந்து வீட்டு வளாகத்திற்குள் வந்துள்ளாள். அப்போது அவளுடைய தாயும் விழித்துக்கொண்டு வெளியே வந்து மகளை ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்துள்ளாய் என கேட்டுள்ளார். ஆனால் சிறுமி எதுவும் சரியாக பதிலளிக்காமல் மீண்டும் தன் அறைக்கு சென்று உறங்கியுள்ளாள். ஆனால் அதிகாலை ஐந்து மணிக்கு இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. சிறுமி மீண்டும் எழுந்துவந்து மாடியில் இருந்து குதித்துள்ளாள். மேலிருந்து ஏதோ விழுந்த சத்தம் கேட்டு அங்கிருந்த செக்யூரிட்டி ஓடி வந்து பார்த்திருக்கிறார். அங்கு சிறுமி சின்னாபின்னமாக விழுந்து இறந்துள்ளாள். உடனே அவர் சிறுமியின் பெற்றோர் மற்றும் அபார்ட்மெண்ட் சங்கத்திற்கு தகவல் அளித்துள்ளார். சிறுமியின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை. ஹுலிமாவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரிசீலனை நடத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.