3வது அலை தடுக்க தீவிரம்

பெங்களூரு: ஜூன் 10 – கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து தயார் நிலையில் உள்ளோம். இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் மூன்றாவது அலை வரை தொடரும்/. என
மாநில கொரோனா தடுப்பு குழு தலைவரும் துணை முதல்வருமான டாக்டர் சி எஸ் அஸ்வத்தநாராயனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் மாநிலத்தின் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆக்சிஜென் விநியோகிப்பது உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழில் நுட்ப ரீதியில் நல்ல சிகிச்சையளிக்கும் நோக்கில் 200 ஆக்சிஜென் விநியோகிக்கும் எந்திரங்கள் உட்பட 2. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மாநில அரசுக்கு நன்கொடையாக வந்துள்ளது. தற்போது அரசின் கையிருப்பில் உள்ள 200 ஆக்சிஜென் பரிமாற்ற கருவிகளை ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதிக்கும் ஒன்று என்ற கணக்கில் 40 தொகுதிகளுக்கு விநியோகிக்கப்படும்; . கொரோனா பாதிப்புள்ளவர்கள் எங்கு இருப்பினும் இதன் வாயிலாகவே ஆக்சிஜென் , பல்ஸ் ரேட் ஆகியவற்றை பரிசோதித்து சிகிச்சை அளிக்க படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.