3வது உலகப்போரா? இஸ்ரேல்-ஹமாஸ் படை பலம் என்ன?

இஸ்ரேல்: அக்.17
காசா நகருக்குள் நுழைந்து ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் இந்த தாக்குதல் நடத்தினால் யார் வெற்றி பெறுவார்கள்? இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படை வீரர்களின் எண்ணிக்கை, ஆயுத பலம் மற்றும் இருதரப்புக்கான நட்பு நாடுகள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் ஒருபகுதியாக காசா உள்ளது.
இங்கு ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகள் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் 7 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இது தான் தற்போது போராக மாறியுள்ளது. இன்றுடன் 11வது நாளாக போர் நடந்து வருகிறது. சிரிக்கும் syria! ரஷ்யா எடுத்த நடவடிக்கை உயிர் பயத்தை காட்டிய ஹமாஸ்.. இஸ்ரேல் பிரதமருடன் பதுங்கு குழிக்குள் ஓடி ஒளிந்த அமெரிக்க செயலாளர்-ஷாக் ஒட்டுமொத்த காசா நகரையும் கைப்பற்றும் நோக்கில் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. வான்வெளி தாக்குதலை தொடர்ந்து காசா நகரை முற்றுகையிட்டு தாக்குதலை தொடங்க தயாராகி வருகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய அளவில் துப்பாக்கிசண்டை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை இந்த போரில் இருதரப்பையும் சேர்த்து 3 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 10,888க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த தயாராகி வரும் நிலையில் 3வது உலகப்போர் வெடிக்கிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஏனென்றால் ஹமாஸ் அமைப்புக்கும் பல இஸ்லாமிய நாடுகள் ஆதரவாக உள்ளன. சுதந்திரமான பாலஸ்தீன நாடு அமைய வேண்டும். இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என அந்த நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளன. மாறாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து, பாரகுவா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த நாடுகளும் கூட அமைதியை தான் விரும்புகின்றன. போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தி வருகின்றன.