3வது நாளாக ஒரு லட்சத்திற்கு கீழே சென்ற தொற்று

புதுடெல்லி, ஜூன் 10- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு-

  • புதிதாக 94,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,91,83,121 ஆக உயர்ந்தது.
  • புதிதாக 6,148 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,59,676 ஆக உயர்ந்துள்ளது.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,51,367 பேர் குணமடைந்துள்ளனர்.
  • இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,76,55,493 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,67,952 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டின் இதுவரை 24,27,26,693 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.