3வது வேட்பாளர் வெற்றி உறுதி எடியூரப்பா நம்பிக்கை

பெங்களூர்: ஜூன். 6 – ராஜ்யசபாவின் மூன்று இடங்களை நாங்கள் ஜெயித்தே ஜெயிப்போம் என்ற நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா எந்த விதத்திலும் நாங்கள் தலையை கெடுத்துக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா லெஹர் சிங்க்கிற்கு மூன்றாவது வேட்பாளருக்கான அனைத்து வாக்குகளும் முதல் வேட்பாளரின் கூடுதல் வாக்குகளை கொடுத்தால் அதுவே எங்களுக்கு போதும். வேறு எந்த வாக்குகளும் அவசியம் இல்லை என்வும் எடியூரப்பா தெரிவித்தார். மனசாட்சி வாக்குகள் குறித்து சித்தராமையா கூறியிருப்பது பற்றி கருத்து தெரிவிக்க எடியூரப்பா மறுத்துவிட்டார். காங்கிரசும் ம ஜ தாவும் உடன்படிக்கை செய்து கொண்டால் பி ஜெ பிக்கு பிரச்சனையாகும் விஷயம் குறித்து தேவையில்லாமல் நாங்கள் ஏன் பேச வேண்டும் என்று பதில் கேள்வி எழுப்பினார். பட்டதாரிகள் தொகுதி தேர்தலின் பின்னணியில் பெலகாவி பாகல்கோட்டே , விஜயபுரா மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டுள்ளோம். இந்த அனைதது தொகுதிகளின் நூறுக்கு நூறு நாங்கள் வெற்றி பெரும் நம்பிக்கை எனக்குள்ளது. காங்கிரசார் கூறுவது மற்றும் வேறு எவரும் கூறுவது குறித்து கருத்து தெரிவிக்க போவதில்லை . மூன்றுக்கு மூன்று இடங்கள் வெற்றிபெறுவது உறுதி இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் எடியூரப்பா தெரிவித்தார்.