3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

சித்ரதுர்கா ஜனவரி 25
சித்ரதுர்கா அருகே நடந்த கோர விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக பலியானார்கள். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். குழந்தைகள் ரோட்டில் இறந்து கிடந்த காட்சி கல் நெஞ்சையும் உருக்குவதாய் இருந்தது. இந்த விபத்து பற்றிய விபரம் வருமாறு மிகவும் வேகமாகமாக சென்றுகொண்டிருந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் மோதியதில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சல்லக்கெரே அருகில் இன்று அதிகாலை நடந்துள்ளது. ராய்ச்சூர் மாவட்டத்தின் தேவதுர்கா தாலூகாவின் தண்டம்மாஹள்ளி யை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சிந்து ஸ்ரீ (2) , அய்யலப்பா (5 மாதங்கள் ) , ரக்ஷா (3 மாதங்கள் ) மற்றும் லிங்கப்பா (26) ஆகியோர் இந்த விபத்த்தில் உயிரிழந்தவர்கள் . இந்த விபத்தில் காயங்களடைந்த எல்லம்மா (30) , மல்லம்மா (20) , நாகப்பா (35) ஆகியோர் செல்லக்கெரே தாலூகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதுடன் இவர்களில் இரண்டு பேர் நிலை கவலைக்கிடமாயுள்ளது. தேவதுர்கா தாலூக்காவின் தண்டம்மனஹள்ளியை சேர்ந்த இறந்தவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் நள்ளிரவு பெங்களூருக்கு சென்றுகொண்டிருந்த கார் வழியில் செல்லக்கெரே தாலுகாவில் சாணிக்கெரே அருகில் கட்டுபாட்டை இழந்து மேம்பாலத்தின் சுவரில் மோதியுள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர் . மற்றும் மூன்று பேர் பலத்த காயங்களடைந்துள்ளனர் . இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பரிசீலனை நடத்தியுள்ளனர். இதே போல் தார்வாடில் சம்பவித்த தாக்கி விட்டு தப்பியுள்ள விவகாரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த ஒருவர் இறந்துள்ளார். . தார்வாட் தாலூகா ஹூப்ளி தளவாய் வீதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தளவாயி கிராமத்தை சேர்ந்த பசவராஜ் ஜட்டன்னவரா (32) என்பவர் ந்த விபத்தில் உயிரிழந்தவர். இவர் ஹூப்ளியல் சந்தையை முடித்துகொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்பும்பது ந்த விபத்து நடந்து உள்ளது . தார்வாட் கிராமத்தார போலீஸ் நிலையத்தில் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.