3 பேர் தற்கொலை

பெங்களூர் : பிப்ரவரி. 22 – தங்களுக்குள் தீ வைத்தது கொளுத்திக்கொண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் சிக்கபள்ளாபுரா மாவட்டத்தின் சிட்லகட்டா தாலூகாவின் ஹென்னூறு கிராமத்தில் நடநதுள்ளது. ஹென்னூறுவை சேர்ந்த தீ வைத்து கொளுத்திக்கொண்ட இரண்டு மகள்கள் , மற்றும் மனைவி அதே இடத்தில் உயிரிழந்திருப்பதுடன் கணவன் படு காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் நேத்ராவதி (37 ) மற்றும் அவளுடைய மகள்களான வர்ஷிதா (12) மற்றும் ஸ்னேஹா (9) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களின் தந்தை சொன்னேகௌடா (48) கடும் தீ காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களின் கூட்டு தற்கொலைக்கு காரணம் என்ன என்பது இன்னும் தெரிய வரவில்லை.. இந்த தற்கொலைகள் குறித்து சிட்லகட்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.