3 மண்டலங்களுக்கு புதிய நிர்வாகிகள்

சென்னை: நவ. 10: அதிமுக தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) பிரிவில் சென்னை, திருநெல்வேலி, விருதுநகர் மண்டலங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிர்வாக வசதிக்காக.. அதிமுக தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) பிரிவில் நிர்வாக வசதிக்காக, மாநில நிர்வாக அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் மண்டலங்கள் மற்றும் அவற்றுக்கு உட்பட்ட மாவட்டங்கள் வரையறை செய்யப்படுகின்றன. அதன்படி, சென்னை, வேலூர் மண்டலங்கள் தலா 9 மாவட்டங்களாகவும், காஞ்சிபுரம், திருநெல்வேலி மண்டலங்கள் தலா 8 மாவட்டங்களாகவும், கோவை,திருச்சி, தஞ்சாவூர், மதுரை மண்டலங்கள் தலா 7 மாவட்டங்களாகவும், விழுப்புரம் மண்டலம் 6 மாவட்டங்களாகவும், சேலம், ஈரோடு மண்டலங்கள் தலா 5 மாவட்டங்களாகவும், விருதுநகர் மண்டலம் 4 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.