3 மாடி கட்டிட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

மொராதாபாத், ஆகஸ்ட். 26 – உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைவாக வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ மளமளவென பற்றி எரிந்ததால், தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், கிடைத்த தகவலின்படி, கட்டிடத்தில் வசித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.