3 மாணவர்கள் நீரில் மூழ்கி சாவு

சிவமொக்கா, ஏப். 2:
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியில் துங்கா ஆற்றில் குளிக்க‌ச் சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
எஸ்எஸ்எல்சி மாணவர்கள் மூவர் ரம்ஜான் நோன்பை முடித்துவிட்டு துங்கா நதிக்கு குளிக்க‌ச் சென்ற போது இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த மாணவர்கள் ரஃபான், இயன் மற்றும் சம்மர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் நதியில் தேடுதல் வேட்டை நடத்தி, 3 மாணவர்களின் உடல்களை வெளியே எடுத்தனர்.
தீர்த்தஹள்ளி நகரில் உள்ள துங்கா நதி ராம மண்டபம் அருகே நடந்த இந்த சம்பவத்தால் குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ள‌னர். இது தொடர்பாக தீர்த்தஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.