Home விளையாட்டு 3-வது சுற்றுக்கு முன்னேறினார் அரினா சபலெங்கா

3-வது சுற்றுக்கு முன்னேறினார் அரினா சபலெங்கா

லண்டன், ஜூலை 3. விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 3-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 48-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவை எதிர்த்து விளையாடினார்.
இதில் அரினா சபலெங்கா 7-6(7-4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில்37-ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் ஓல்கா டானி லோவிக்கை தோற்கடித்தார்.
22-ம் நிலை வீராங்​க​னை​யான குரோஷி​யா​வின் டோனா வெகிக் 1-6, 3-6 என்ற செட் கணக்​கில் ஸ்பெ​யினின் 102-ம் நிலை வீராங்​க​னை​யான கிறிஸ்​டினா புக்​சா​விடம் தோல்வி அடைந்​தார். இதே போன்று 29-ம் நிலை வீராங்​க​னை​யான கனடா​வின் லெய்லா பெர்​னாண்​டஸ் 2-6, 3-6 என்ற செட் கணக்​கில் ஜெர்​மனி​யின் 104-ம் நிலை வீராங்​க​னை​யான லாரா சீக்​மன்​டிடம் வீழ்ந்​தார். ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் 12-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பிரான்​சிஸ் தியாஃ​போ, 61-ம் நிலை வீர​ரான இங்​கிலாந்​தின் கேமரூன் நோரி​யுடன் மோதி​னார். 2 மணி நேரம் 56 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் கேமரூன் நோரி 4-6, 6-4, 6-3, 7-5 என்ற செட் கணக்​கில் தியாஃ​போவை வீழ்த்தி 3-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 29-ம் நிலை வீர​ரான அமெரிக்கா​வின் பிரண்​டன் நகஷிமா 3 மணி நேரம் 34 நிமிடங்​கள் போராடி 71-ம் நிலை வீர​ரான சீனா​வின் யுன்​சாவோகேடே பூவை 6-4, 4-6, 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்​கில் தோற்​கடித்து 3-வது சுற்​றில்​ நுழைந்​தார்​.

Exit mobile version