3-வது முறையாக முதல்வர் ஆக யாகம் நடத்திய சந்திரசேகர ராவ்

ஹைதராபாத்:நவ.2-
தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. இதுவரை பிஆர்எஸ் கட்சி மட்டுமே அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியுள்ளது. இந் நிலையில், முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டால் உட்கட்சி பூசல் ஏற்படும் என்றும் தங்கள் கட்சி வேட்பாளர்களையே தோற் கடித்து விடுவார்கள் என்றும் இவ் விரு தேசிய கட்சிகளும் அச்சப்படு கின்றன என சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.இந்நிலையில், தெலங்கானா மாநிலம் உருவான கடந்த 2014 முதல் தற்போது வரை தொடர்ந்து 2 முறையாக சந்திரசேகர ராவ் முதல்வராக பதவி வகித்து வருகி றார். இம்முறை 3-வது முறையாக ஹாட்ரிக் சாதனை படைத்து முதல்வராக பதவியில் தொடர வேண்டுமென்பதே சந்திரசேகர ராவின் லட்சியமாக உள்ளது.இதற்காக சித்திபேட்டை மாவட் டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தம்பதி சமேதராக நேற்று முதல் ராஜசியாமள யாகத்தை தொடங்கி உள்ளார் சந்திரசேகர ராவ். ஆனால், இரு தெலுங்கு மாநிலங்களும் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடையவே இந்த யாகம் நடத்தப் படுவதாக அவரது கட்சியினர் தெரிவிக்கின்றனர். இந்த ராஜசியாமள யாகத்துக் காக நேற்று அங்குரார்ப்பன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விசாகப்பட் டினத்தில் உள்ள சாரதா பீடாதிபதியான ஸ்வரூபானந்த சுவாமிகளின் தலைமையில் இந்த யாகம் நடத்தப்படுகிறது. இதற்காக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து வேத பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த யாகத்தை ஆகம விதிகளின்படி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.முதல் நாளான நேற்று, கோ பூஜை, கணபதி ஹோமம், புண்ணியாவச்சனம் போன்றவை நடத்தப்பட்டன. அப்போது அங்கு தாயாரை வன துர்கையாக அலங்காரம் செய்திருந்தனர். இன்று வேத பாராயணம் நடை பெறுகிறது. நிறைவு நாளான நாளை பூர்ணாஹுதியுடன் யாகம் நிறைவடையும் என ஸ்வரூபானந்த சுவாமிகள் தெரிவித்தார்.