3 வயது சிறுமி மீதுஆசிரியர் பாலியல் வன்கொடுமை

பெங்களூரு, ஜூலை 5- கேஜிஹள்ளியில் மூன்று வயது சிறுமியை நர்சரி பள்ளி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கேஜி ஹள்ளி, வெங்கடேஸ்வராபூர் அன்வர் லேஅவுட் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெங்கடேஸ்வரா புரம் அன்வர் லேஅவுட்டில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் சிறுமி படித்து வருகிறார். ஜூன் 6ல் இருந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த சிறுமி, 10 நாட்கள் கழித்து ‘ பள்ளிக்கு செல்லவில்லை’ என்று சொல்ல ஆரம்பித்தாள்.
என்ன நடந்தது இன்று சிறுமியிடம் விசாரித்தபோது அந்தரங்க உறுப்புகளில் ஏற்பட்ட வலி குறித்து கூறியுள்ளாள்.
பின்னர், ஆசிரியரின் செயலைப் பற்றி தெரிவித்து உள்ளாள்.
உடனடியாக மகளை வாணி விலாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கேஜி ஹள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பெற்றோர் விளக்கமளித்துள்ளனர்.
ஆசிரியரின் பெயர் தெரியாத சிறுமி, தன் பெற்றோரிடம், ‘மேடம்’ என கூறி, புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ், ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.