30 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை: மார்ச் 22. தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி 27 ஆண், 3 பெண் உட்பட 30 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, முதல் கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்கள வைத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்.19-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், நேற்று முன்தினம் மார்ச் 20-ம்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.
நேற்று முன்தினம் இரவு வரை, 20 ஆண்கள், 2 பெண்கள் என 22 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இரண்டாம் நாளான நேற்று காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி மாலை 3 மணிக்கு நிறைவுற்றது. அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையத்தின் தகவல் படி 27 ஆண்கள், 3 பெண்கள் என 30 பேர் நேற்று வரை மனுத்தாக்கல் செய்தி ருந்தனர்.
சென்னையை பொறுத்தவரை, தென்சென்னை தொகுதியில் தாக்கம் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், மத்திய சென்னையில் சுயேச்சை ஒருவரும் என 2 பேர் மட்டும் மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.