300 டன் குப்பை அகற்றம்

சென்னை: நவம்பர். 13 – இரவு முழுக்க விடாமல் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுவாக தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். அதிகாலையே எண்ணெய் தேய்த்து குளிப்பது, புதிய உடை உடுத்தி வெடி வெடிப்பது, பல்வேறு இனிப்புகளை சாப்பிடுவது, இட்லி மட்டன் குழம்பி சாப்பிடுவது என்று தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும்.
அதே சமயம் பொங்கல், பூஜை போல இல்லாமல் தீபாவளி பண்டிகைக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் காற்று மாசு மற்றும் குப்பைதான். தீபாவளியில் வெடி வெடிப்பதால் அதிக அளவு புகை ஏற்பட்டு காற்று மாசு ஏற்படும்.
அதேபோல் கடுமையான சத்தம் காரணமாக ஒலி மாசு ஏற்பட்டு பொதுமக்கள், வயதானவர்கள், விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும்.
இதெல்லாம் போக மிக அதிக அளவில் குப்பைகள் சேர்ந்து சாலைகள் மிக மோசமாக காட்சி அளிக்கும். அந்த வகையில் நேற்று சென்னையில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. குப்பைகள்: இரவு முழுக்க விடாமல் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மாலை தொடங்கிய சுத்திகரிப்பு பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. பல இடங்களில் இருக்கும் குப்பைகளை கைகளால் அள்ளி அதற்கு உரிய வாகனங்களில் ஏற்றி அனுப்பி வருகிறார்கள்.
பட்டாசு பேப்பர்கள் தெருக்களை நிரப்பி உள்ளன. இதனால் சாலைகள் குப்பை கடலாக மாறி உள்ளது. இந்த பேப்பர்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி கணக்குப்படி 300 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன.