32 வாகனங்கள் மீது கல் வீசிய மர்ம நபர்கள்

பெங்களூரு, செப். 25-
நேற்று இரவு பைடரஹள்ளியில் சாலையோரத்தில் வீடுகளுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசிய சம்பவம் நடந்தது.
பைதரஹள்ளியில் உள்ள கிடடகோனேனஹள்ளி அருகே சாலையோரத்தில் வீடுகளுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த 32 கார்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தப்பிச் சென்றனர்.
கல் வீசியதில் 32 வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்து லட்சக்கணக்கான மதிப்புள்ள சேதம் ஏற்பட்டது.
செய்தி கிடைத்ததும், பைதரஹள்ளி போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.