35 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

பெங்களூர்,செப்.5- ஒரே நேரத்தில் 35 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து
கர்நாடக போலீஸ் துறைக்கு அரசு இன்று காலை அதிரடி அதிர்ச்சி கொடுத்தது. இது கர்நாடக உள்துறையில் அதாவது காவல்துறையில் செய்யப்பட்ட மிகப்பெரிய ஆபரேஷன் என்று வர்ணிக்கப்படுகிறது. இதற்கான அதிகார பூர்வ உத்தரவை அரசு இன்று காலை பிறப்பித்தது இது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாநிலம் முழுவதும் முக்கியப் பணியிடங்களில் இடமாற்றம், டி.சி.பி., உள்ளிட்ட பல மாவட்ட எஸ்.பி.,க்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அடுத்த இரு நாட்களில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்ற விபரம் வருமாறு:
அனுபம் அகர்வால் – மங்களூர் நகர போலீஸ் கமிஷனர்
டாக்டர். எஸ்.டி.சரணப்பா இயக்குனர்- கர்நாடகா போலீஸ் அகாடமி மைசூர். வர்த்திகா கட்டியார் – எஸ்பி மாநில குற்றப் பதிவுப் பிரிவு, எஸ். கிரிஷ்- டிசிபி மேற்கு பெங்களூரு,
சஞ்சீவ் எம். பாட்டீல்- டிசிபி ஒயிட் ஃபீல்ட், கே. சந்தோஷ் பாபு – டிசிபி நிர்வாகம் பெங்களூர், ராகுல் குமார் ஷஹாபுர்வாட்- டிசிபி தெற்கு பிரிவு பெங்களூர், டி.தேவராஜ்- டிசிபி கிழக்கு பெங்களூர், கார்த்திக் ரெட்டி- டிசிபி பெங்களூர் போக்குவரத்து தெற்கு பிரிவு, அப்துல் அஹாத்- டிசிபி பெங்களூர் மத்திய பிரிவு
யதீஷ் சந்திரா ஜிஎச்- எஸ்பி- உள் பாதுகாப்பு பிரிவு
டாக்டர் பீமா சங்கர் குலேட் – எஸ்பி, பெலகாவி, நிகம் பிரகாஷ் அம்ரித்- எஸ்பி வயர்லெஸ், கே.பரசுராம்- எஸ்பி. உளவுத்துறை.எச்.டி.ஆனந்த் குமார்- எஸ்.பி., சிவில் உரிமைகள் மற்றும் அமலாக்க இயக்குனரகம்.
டாக்டர் சுமன் டி. பென்னேகர்- ஏஐஜிபி, தலைமையகம்-1
தேகா கிஷோர் பாபு- எஸ்பி முதல்வர், போலீஸ் பயிற்சி மையம், கலபுர்கி,
டாக்டர் கோனா வம்சிகிருஷ்ணா – டிசிபி, கமாண்ட் சென்டர் பெங்களூர், லக்ஷ்மன் நிம்பராகி- எஸ்பி, மாநில குற்றப் பதிவுப் பிரிவு, டாக்டர் அருண். கே- எஸ்பி, உடுப்பி, முஹம்மது சுஜீதா. எம்எஸ்- எஸ்பி ஹாசன், ஜெயபிரகாஷ்- எஸ் பி உளவுத்துறை, சேகர்.எச். . தேக்கண்ணவர்- டிசிபி, சிசிபி பெங்களூர்,சாரா பாத்திமா- டிசிபி போக்குவரத்து மேற்குப் பிரிவு பெங்களூரு, சோனாவனே ரிஷிகேஷ் பகவான்- எஸ்பி விஜயபூர், லோகேஷ் பரமப்பா ஜகல்சார்- எஸ்பி, கர்நாடகா போலீஸ் அகாடமி, மைசூர்.
ஆர். ஸ்ரீனிவாஸ் கவுடா- டிசிபி-2, சிசிபி பெங்களூர், பி.கிருஷ்ணகாந்த்- ஏஐஜிபி (நிர்வாகம்).அன்ஷு குமார் – எஸ்பி, கடலோர பாதுகாப்பு போலீஸ், உடுப்பி, கன்னிகா சிக்ரிவால் – டிசிபி, சட்டம் மற்றும் ஒழுங்கு, கலபுர்கி, குஷால் சௌக்சி – இணை இயக்குனர், தடய அறிவியல் ஆய்வகம், பெங்களூர், ரவீந்திர காஷிநாத் கடாடி – எஸ்பி உளவுத்துறை ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் எந்தெந்த பகுதியில் பணியாற்றுவார்கள் என்பது குறித்த தகவல் அறிவிக்கப்பட உள்ளது