370 ரத்துக்கு பின் முதல் தேர்தல் ஜம்மு காஷ்மீரில் யாருக்கு வெற்றி?

காஷ்மீர்: மார்ச் 13
ஜம்மு காஷ்மீரில் பாஜக 2 தொகுதிகள் வரை வெற்றி பெறக்கூடும் என்று ஏபிபி சி வோட்டர் சர்வே முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் கிடைக்குமாம். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் முறையாக ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்து வருகின்றன. நாடு முழுவதும் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் பரபரபக்க ஆரம்பித்துவிட்டன. தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன
அந்த வகையில் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பை இன்று வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கான சர்வே முடிவுகள் வெளியாகின. இதில் ஜம்மு காஷ்மீரில் எந்த கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பது பற்றி சர்வேயை ஏபிபி சி வோட்டர் வெளியிட்டுள்ளது. 370 ரத்த்துக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் அங்கு யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
அதன்படி, ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கு 2 இடங்கள் வரை கிடைக்கும் என்று சர்வே முடிவுகள் கூறியுள்ளன. காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளாதம். வாக்கு
சதவிகிதத்தை பொறுத்தவரை பாஜக 42 சதவிதமும்ம், காங்கிரஸ் 44 சதவிகிதமும் பிடிபி 7 சதவிகிதமும், பிற கட்சிகள் 7 சதவிகிதமும் உள்ளன.