39 ஆண்டுகளாக‌ புதுப்பிக்கப்பட்டாமல் உள்ள மல்லேஸ்வரம் பூ மார்கெட்

பெங்களூரு, ஜன. 9: 39 ஆண்டுகளாக மல்லேஸ்வரம் மலர் மார்கெட் புதுப்பிக்கப்பட்டாமல் உள்ளதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு மல்லேஸ்வரம் மார்க்கெட்டில் சிறந்த வசதிகளுடன் புத்தம் புதிய மார்க்கெட் அமையும் என்ற 2015 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட வாக்குறுதியால், அங்கிருந்த‌ வியாபாரிகள் உடனடியாக தங்கள் கடைகளை காலி செய்தனர்.
புதிய கட்டிடம் கட்டுவதற்காக மலர் மார்கெட்டிலிருந்து கடையை காலி செய்து 9 ஆண்டுகள் ஆகிறது என்கிறார் விற்பனையாளர் மஞ்சுளா.
பெங்களூரின் முக்கிய மலர் மார்கெட்டுகளில் ஒன்றாக விளங்கும், இது விற்பனையாளர்களின் நம்பிக்கை விரக்தியாக மாறியுள்ளது. மறுவடிவமைப்பு பணிகள் காலதாமதம் ஆகொ வருவது, அவர்களின் வாழ்க்கையை சிரமத்திற்கு தள்ளி உள்ளது. ஆட்சியாளர்களின் வாக்குறுதியளிக்கப்பட்ட புகலிடத்திற்காக காத்திருக்கும் போது, விற்பனையாளர்கள் தங்கள் தற்காலிக தங்குமிடங்களில் குறைந்து வரும் வருமானம் மற்றும் மோசமான நிலைமைகளுடன் போராடுகிறார்கள்.
மடிவாளா, மல்லேஸ்வரம் மற்றும் காக்ஸ் டவுன் மார்கெட்டுகளில், கழிவறை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது அவர்களின் அன்றாட துயரங்களையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
மடிவாள காய்கறி வியாபாரி சுஜாதா, “மழைக்காலம் என்பது கனவாகவே உள்ளது. கசிவு தார்பாய்கள் மற்றும் கடைகளில் தண்ணீர் தேங்கி எங்கள் பொருட்களை சேதப்படுத்துகிறது. மரக்கிளைகள் கூட முறிந்து விழுகின்றன. தற்காலிக கடைகளில், விற்பனையாளர்களுக்கு திருட்டு மற்றும் எலி தொல்லை அதிகரித்துள்ளது.
மல்லேஸ்வரத்தை சேர்ந்த ஜெயம்மா கூறியது: சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் திருடு போகின்றன அல்லது எலி, கழுதைகளால் சேதமாகின்றன. தற்காலிக கடைகளில் மின்சாரம் இல்லாததால் பேட்டரியில் இயங்கும் விளக்குக்கு மாதந்தோறும் ரூ.1,800 செலவிடப்படுகிறது.
காக்ஸ் டவுனில், 22 ஆண்டுகளாக இடம்பெயர்ந்த விற்பனையாளர்களுக்கு, புதிதாக கட்டப்பட்ட மார்கெட்டில், கடைகள் கூட ஒதுக்கப்படாதது தொடர்கதையாக உள்ளது. சட்டப் போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. காக்ஸ் டவுன் மார்கெட்ப் பணிகள் முடிந்த போதிலும், இன்னும் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. புதுப்பிக்கப்பட்ட மார்கெட்டுகளில் ஒதுக்கப்பட்ட சில கடைகளில் அதிக வாடகை வசூலிக்கப்படுவதாக சில விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மடிவாளா மற்றும் காக்ஸ் டவுனில் உள்ள மார்கெட்டுகளில் ஏற்பட்ட மந்தநிலைக்கு பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்பி) சட்ட தடைகள் மற்றும் நிதி சிக்கல்களை மேற்கோள் காட்டியபோதும், பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் (பி.டி.ஏ) மல்லேஸ்வரத்தில் தாமதத்திற்கு ஒப்பந்ததாரரை நோக்கி விரல்களை சுட்டிக்காட்டுகிறது. ஒரு மூத்த பிபிஎம்பி அதிகாரி, கடை வாடகை அரசு நிர்ணயித்த நிலையான விகிதங்களை அடிப்படையாகக் கொண்டது. விற்பனையாளர்கள் நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். இதனால் மேலும் வழக்கு நீட்டிக்கப்படுகிறது.
பணிகள் மெதுவாக நடைபெறும் போது நிதியும் சிக்கலாகிறது என்றார்.