4 சீன துப்பாக்கிகள்

அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் 553 கிமீ தொலைவுக்கான இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியை எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாத்து வருகின்றனர். இந்த பகுதியில் சில ஆண்டுகளாகவே ட்ரோன் மூலம் அச்சுறுத்தல்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகேடிரோன் மூலம் இந்தியாவுக்குள் கடத்தப்படவிருந்த 4 சீன துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக வந்த டிரோனை உஞ்சா தக்கலாவில் எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி கைப்பற்றினர். டிரோனில் இருந்து வந்த 4 சீன தயாரிப்பு துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சீன துப்பாக்கிகள் இந்திய எல்லையில் கண்டெடுக்கப்பட்டதால் எல்லை பாதுகாப்பு படையினர் டிரோன் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாளையங்கோட்டை ஜன.18-
அருகே உள்ள இலந்தைகுளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 18). இவர் சிவந்திபட்டியில் பால் கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இசக்கிபாண்டி சிவந்திபட்டி, நடுத்தெரு பகுதியில் பால் எடுத்துக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த சிவந்திபட்டியை சேர்ந்த மாரிமுத்து (20), சேரன்மகாதேவி கூனியூரை சேர்ந்த சேதுராமன் (23) ஆகிய இருவரும் சேர்ந்து எங்கள் ஊரில் வந்து எப்படி பால் எடுக்கலாம்? என அவதூறாக பேசி அடித்து உதைத்து காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து இசக்கிபாண்டி சிவந்திபட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாரிமுத்து, சேதுராமன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தார்.