
சென்னை:நவ.9- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. கடந்த மாதம் தங்கத்தின் விலை உச்சம் அடைந்து வந்த நிலையில், தற்போது சரிய தொடங்கியுள்ளதால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றுடன் சேர்த்து 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறைந்துள்ளது. அதாவது, கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. இதேபோல், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. அதேபோன்று நேற்றும் சவரனுக்கு ரூ.80 குறைந்தது.
தீபாவளி போனஸ் தொகையை தங்கத்தில் முதலீடு செய்ய பலரும் திட்டமிட்டுள்ளனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,515க்கு விற்பனையாகிறது.