4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்து கொண்ட பிரஜ்வல்

பெங்களூரு, ஜூலை.4 -பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை கொண்ட‌து தெரிய வந்துள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் பலாத்காரம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 4 வழக்குகளை விசாரித்த சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்றுதான் இந்த எச்ஐவி. பெண்களை அச்சுறுத்தி, பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாக பிரஜ்வல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எச்ஐவியால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக, 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி, பரிசோதனை செய்து கொண்டது அவர் மீதான குற்றச்சாட்டிற்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
இந்த சோதனை பிரஜ்வல் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இதை பிரஜ்லுக்கு எதிரான ஆதாரமாக பயன்படுத்த எஸ்ஐடி முன்மொழிந்துள்ளது. பிரஜ்வ‌ல் பெண்களை பலாத்காரம் செய்த வழக்குகள் தொடர்பான பதிவுகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.