40 இடங்களில் வருமான வரி சோதனை

சென்னை செப். 20- தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இவர் ஏற்கனவே மின்சாரத்துறையில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர்.